'விளையாட்டை விட என் குடும்பம் ரொம்ப முக்கியமானது' - இந்திய வீரர்

Report Print Abisha in கிரிக்கெட்

விளையாட்டை விட இந்தத் தருணத்தில் குடும்பம்தான் முக்கியமானது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்திய வீரர்கள் தங்கள் வீடுகளில் இருந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா, “எல்லோரும் இப்போது விவேகமானவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நீங்கள் வைரஸ் தொற்றுள்ள எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது. இந்த விவகாரத்தில், நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும். நீங்கள் அவசியமானதை, அவசரமானதை மட்டுமே செய்யுங்கள். மேலும் ஒற்றுமையாக இருப்பது அனைவரின் பொறுப்பாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக வீட்டில் தங்க முடியுமோ அவ்வளவும் நல்லது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் நிறுத்தப்படுவது குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, எடுக்க வேண்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். கொரோனா உலகளாவிய அச்சுறுத்தலாகும். ஐ.பி.எல் நடப்பது நல்லது. ஆனால் உங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. உங்களுக்கு குடும்பம், நண்பர்கள் எனப் பலர் உள்ளனர். நீங்கள் உண்மையிலேயே சென்று உங்கள் அன்புக்குரியவர்களை கவனிக்க வேண்டும். எனது விளையாட்டை விட எனது குடும்பம் முக்கியமானது. இது அனைவருக்கும் ஒரே மாதிரியானதுதான்” என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்