டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஓவரை பிரவோவுக்கு பதிலாக ஜடேஜாவை போட வைத்தது ஏன் என்பது குறித்து சென்னை அணித்தலைவர் டோனி விளக்கமளித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்து போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐடேஜா ஓவரில் ஆக்சர் படேல் 3 சிக்சர்களை விளாசி டெல்லி அணியை வெற்றிப்பெறச் செய்தார்.
போட்டிக்கு பின் பேசிய டோனி, சென்னை அணியின் தோல்விக்கு பீல்டர்கள் தான் காரணம் என ஒப்புக்கொண்டார்.
மேலும், காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை. அவர் மைதானத்திலிருந்து வெளியேறிவிட்டார் திரும்ப வரவில்லை.
எனவே, கடைசி ஓவரை வீச ஜடேஜா அல்லது கரண் சர்மா இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அதனால் தான் ஜடேஜாவை வீச வைத்தேன் என டோனி விளக்கமளித்துள்ளார்.
காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை என சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கமளித்துள்ளார்.