முதல் டெஸ்ட்டில் தோற்ற வெறி! இங்கிலாந்தை கதறவிடும் இந்தியா: மிரட்டி வரும் தமிழன் அஸ்வின்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 329 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோகித்சர்மா 161 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் ஆடி வரும் இங்கிலாந்து அணி திணறி வருகிறது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின் இங்கிலாந்து அணியை ஆரம்பத்தில் இருந்தே கதறவிட்டார்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை(6), இந்த முறை அக்சர் பட்டேல் தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம், அவுட்டாக்கினார்.

அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இப்போட்டியில் இந்திய அணி சார்பில், ரவிச்சந்திர அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம், இந்தியா தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் அந்தணி கடும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்