தேசிய கலை இலக்கியப் பேரவையின் உரையாடல்கள்

Report Print Akshi in கலாச்சாரம்

தமிழ்ச் சூழலில் காத்திரமான கலந்துரையாடல்களும் அறிவுப்பகிர்விற்குமான காலமாக தேசிய கலை இலக்கியப்பேரவை பௌர்ணமி தோறும் நிகழ்த்தும் உரையாடல்களில் இந்த மாத நிகழ்வு "அரசியல் யாப்பு சீர்திருத்த முனைப்புக்களும் தமிழ் மக்களின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்று மாலை 5.00 மணியளவில் ஹம்டன் லேன் வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வினை பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் த.இராஜரட்னம் நெறியாள்கை செய்ய கருத்தாளர்களாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திராவும் தேசிய கலை இலக்கியப்பேரவையின் பொதுச் செயலாளரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளருமாகிய தெ.ஞா.மீநிலங்கோவும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments