நான் உயிரோடு இருக்கும் வரை! நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை ரம்பா தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் உணர்வுப்பூர்வமாக தாய்மை ததும்பும் பதிவினையும் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில் ரம்பா, "எனது மகன் ஷிவினை நான் கையில் ஏந்தும்போது ஒரு சிறிய சர்க்கரைப் பை போல் இருக்கிறது. போர்வைக்குள் இருந்து அந்த பிஞ்சுவிரல்கள் அழகாக எட்டிப் பார்க்கின்றன. அவனது சிரம் கருமையான சுருள் முடியால் அழகாக இருக்கிறது. என் கரங்களில் அந்த கூந்தல் வழிந்தோடுகிறது.

பிஞ்சுக் குழந்தைகளின் இந்த சிறிய உருவம் என்னை வியக்க வைக்கிறது. எனது ஆவலைத் தூண்டுகிறது.

கோடை கால ஸ்ட்ராபெர்ரி போல் ஷிவின் புன்னகைக்கிறான். என்னுள் சூரிய ஒளியை நிரப்புகிறான். அவன் நிரப்பிய சூரிய வெளிச்சம் இவ்வுலகில் இல்லை.

அவனது கண்கள், நான் நினைத்துப் பார்த்ததைவிட பிரகாசமாக இருக்கின்றன. அவனது உள்ளங்கை அவ்வளவு மென்மையாக இருக்கின்றன. லகுவாக இருக்கிறான். அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறான்.

அவன் மீது வீசும் மணம் தெய்வீகமாக இருக்கிறது. நான் உயிருடன் இருக்கும்வரை நானே அவனுக்கு காவல். எனது குழந்தைகள் மீதான அன்பு தீராது" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers