அடுக்கடுக்காக குவிந்த புகார்கள்: பிரபல பெண் பட தயாரிப்பாளர் திடீர் கைது

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் பட பெண் தயாரிப்பாளர் ப்ரெர்னா அரோரா மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் படத்தயாரிப்பாளரான ப்ரெர்னா அரோரா KriArj என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவரது நிறுவன தயாரிப்பில் டாய்லட் ஏக் பிரேம் கதா, ருஸ்டெஸ்ட் மற்றும் பேட்மேன் போன்ற பல வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளன.

இவர் தற்போது ரூ.16 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திரைப்பட விநியோகிப்பாளரான வாசு பக்னானி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரோரா மீது மோசடி குற்றசாட்டு வருவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக பத்மா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அனில் குப்தா, அரோரா மற்றும் அவருடைய நிறுவனம் நிதி மோசடிகளை ஊக்கப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகரும், ஜே.ஏ தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனருமான ஜான் ஆபிரகாம், அரோராரா மற்றும் அவருடைய நிறுவனத்தின் மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால் இந்த புகார்களுக்கு அரோரார் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவருடைய வீட்டிலிருந்து ஏராளமான பான் கார்டு மற்றும் பாஸ்போர்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரோரா மீது அடுக்கடுக்கான குவியும் புகார்களால், விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers