சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல; ரஜினியின் முன் கொந்தளித்த பிரபல நடிகர்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார்.

சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா.

இந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், சீமானின் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என கொந்தளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன் என்றார்.

தான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்லும்போது கூட சமகால அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவர்களை புகழ்கிறார்.

மு.க.ஸ்டாலின் தொடங்கி சீமான் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார். முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள்.

பின்னர் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அது ரஜினி மீதுள்ள அவர்களின் மரியாதை என்றார் லாரன்ஸ்.

தொடர்ந்து பேசிய அவர், நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என அழுத்தமாக தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்