S.P.B மரணத்திற்கு சீனா தான் காரணம்! சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ள தீவிர ரசிகர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாடகரான எஸ்.பி.பி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் மரணத்திற்கு சீனா தான் காரணம் என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்த்தவர் சீனிவாச ராவ். இவர் பாடரகான எஸ்.பி.பியின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் எஸ்.பி.பியின் மரணத்திற்கு சீனா தான் காரணம் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்

இது குறித்து சீனிவாச ராவ் கூறுகையில்,கடந்த 8 மாதமாக கொரோனவால் நமது நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.

இந்த கொரோனா என்னும் நோயை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியது சீனா தான், ஆனால் அதற்கான எந்த பதிலையும் சீனா தரவில்லை.

மேலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை அளிக்கவே சீனா இந்த வேலையை செய்துள்ளது.

இந்த கொடிய கொரோனா நோயை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது. இதன் காரணமாக தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்