பிரபல திரைப்பட நடிகர் காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
938Shares

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான கே ஜி முகமது பாபு தனது 80வது வயதில் காலமானார்.

ஜீரோ பாபு என அழைக்கப்பட்ட முகமது பாபு நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர்.

கடந்த 1964ல் திரையுலகில் அறிமுகமான இவர் பல 300க்கும் அதிகமான திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

முக்கியமாக 90களில் புகழின் உச்சத்தில் ஜீரோ பாபு இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று காலமானார்.

மறைந்த ஜீரோ பாபுவுக்கு அதிகா பாபு என்ற மனைவியும், சுராஜ், சுல்பி, சபிதா, தீபத் என்ற 4 பிள்ளைகளும் உள்ளனர்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்