ஆஸ்துமா நோயை குணமாக்க இப்படி ஒரு வழியா? 3 மாதத்தில் குறையுமாம்

Report Print Printha in உடற்பயிற்சி
1437Shares
1437Shares
ibctamil.com

தூதுக்கள் ஏற்படும் ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஆஸ்துமா எனும் இரைப்பு நோய் ஏற்படுகிறது.

இந்த ஆஸ்துமா பிரச்சனையால் இருமல், இரைப்பு, மூச்சுத்திணறல், மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கான நிரந்தரத் தீர்வாக சுவாசகோச எனும் முத்திரை உதவுகிறது.

சுவாசகோச முத்திரை செய்வது எப்படி?

சுண்டு விரலால் கட்டை விரலின் அடி ரேகையையும், மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையையும் தொட வேண்டும்.

அதன் பின் நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியை தொட்டு ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்ட வேண்டும்.

இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் கையை கவிழ்த்து அல்லது கீழ்நோக்கி வைக்கக் கூடாது.

இந்த முத்திரையை விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ, கால்களை தரையில் ஊன்றியோ மற்றும் படுத்த நிலையிலோ செய்யலாம்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 முறைகள் செய்யலாம். இரைப்பு, இருமல் உள்ளவர்கள் அவைகள் குறையும் வரை செய்து கொண்டே இருக்கலாம்.

தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த முத்திரையை செய்யலாம்.

பலன்கள்
  • இரைப்பு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • நெஞ்சில் சளித்தொல்லை வராமல் தடுக்கும்.
  • மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் அடைப்பை ஆகியவை குறையும்.
  • தும்மல், அலர்ஜி ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.
குறிப்பு

ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வந்தால், 3 மாதங்களில் ஆஸ்துமா நோயின் தீவிரம் குறையும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்