சுவையான பச்சைப் பட்டாணி மசாலா தயாரிப்பது எப்படி..?

Report Print Abisha in உணவு
தேவையானவை
 • வெங்காயம் - 1,
 • தக்காளி - 1,
 • பச்சை மிளகாய் - 3,
 • இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
 • காய்ந்த மிளகாய் - 1,
 • தனியா தூள் - 1 டீஸ்பூன்,
 • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
 • கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
 • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
 • உப்பு, தேங்காய் எண்ணெய், கடுகு - தேவைக்கு,
 • கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
தயாரிக்கும் முறை
 1. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக வெட்டி கொள்ளவும்.
 2. குக்கரில் 1 விசில் வரும் வரை பட்டாணியை வேக வைக்கவும்.
 3. பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவை சேர்த்து வதக்கவும்.
 6. பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
 7. கெட்டியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
 8. ...சுவையான பட்டாணி மசாலா தயார்...

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்