இங்கிலாந்து வெற்றியை கொண்டாடிய கால்பந்தாட்ட ரசிகர்: காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in கால்பந்து

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது இங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய ரசிகர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் துனீசியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வழக்கமான ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தன.

கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து அணியின் ஹாரி கேன் கோல் அடிக்க இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் பல இடங்களிக் கொண்டாடினர். அந்த வகையில் பிளே மெளத் பகுதியில் இருக்கும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே கார் ஒன்று வந்துள்ளது. இந்த காரின் மேல் ஏறி ரசிகர் ஒருவர் வெற்றியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று அந்த கார் அசுரவேகத்தில் சென்றது.

அதன் பின் கார் நிறுத்தப்பட்டதால், காரின் மேல் இருந்த ரசிகர் தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பான காட்சி வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட நபருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...