மோதலோடு தொடங்கிய போட்டி: பரிதாபமாக தோற்ற IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

நேற்று நடைபெற்ற போட்டியில் வல்வை FC அணியை எதிர்த்து IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்கவில்லை. போட்டின் ஆரம்பத்திலேயே வல்வை FC அணியின் பயிற்றுனருக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதால் போட்டியில் சலசலப்பு ஏற்பட்டு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பின் போட்டி மீண்டும் ஆரம்பமாகியது. ஆக்ரோசமாக நடைபெற்ற போட்டியில் வல்வை FC அணி தனது முதல் கோலை பனால்டி உதை மூலம் பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் ம.இரண்டு கோல்களை அடித்து வல்வை FC அணி முன்னிலையில் இருந்தது.

வல்வை FC அணி சார்பில் ஞானரூபன் மற்றும் பீமா ஒவ்வொரு கோல்களை அடித்திருந்தனர்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கிளியூர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டாலும் வல்வை FC அணி மேலும் ஒரு கோலை பெற்றுக்கொண்டது.

இரண்டாவது பாதியாட்டத்தின் இறுதியில் வல்வை FC அணியின் அணித்தலைவர் ஞானரூபன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

மேலும் வல்வை FC அணியில் ஐவருக்கும் IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியில் ஒருவருக்குமாக மொத்தம் 6 பேருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு ஆக்ரோசமாக போட்டி காணப்பட்டது.

இரண்டாவது பாதியில் IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி கிடைத்த பனால்டி வாய்ப்பை நையீரிய வீரர் மைக்கல் தவற விட கிளியூர் கிங்ஸ் அணியால் இறுதிவரை எந்த கோல்களையும் பெற முடியவில்லை.

இறுதியாக 03 :00 என்ற கோல் கணக்கில் வல்வை FC அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வல்வை FC அணியின் சிறப்பாட்டக்காரர் பீமா தெரிவானார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...