ஒரே நாளில் கோடீஸ்வரனான பிச்சைக்காரர் மாயம்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு தலைப்புச்செய்திகளில் இடம்பெற்ற இந்தக் குற்றச்சம்பவம் விரைவில் ஒரு திரைப்படமாக வெளிவரலாம்.

வீடின்றி Charles de Gaulle ஏர்போர்ட்டிலேயே உண்டு உறங்கிய நபர் ஒருவர் அரை மில்லியன் யூரோக்களைத் திருடிக்கொண்டு மாயமானார்.

ஏர்போர்ட்டில் இயங்கிவரும் Loomis என்னும் நிதி நிறுவனத்தின் கதவுகள் எப்போதுமே இறுகப் பூட்டப்பட்டிருக்கும், அனுமதியின்றி அதன் உள்ளே நுழைவது இயலாத காரியம்.

அந்த நபரின் அதிர்ஷ்டம், அன்று அந்தக் கதவுகள் பூட்டப்படாமல் இருந்ததால் உள்ளே நுழைந்தவர் வெறும் 32 விநாடிகளில் இரண்டு மூட்டை பணத்துடன் மாயமானார்.

ஒரு மாதமாகியும் இந்த வழக்கில் எந்தவொரு தடயமும் கிடைக்காததால், Loomis நிறுவனமும் காவல்துறையும் அவமானத்தில் குறுகிப்போயுள்ளன.

பணப்பைகளில் GPS Tracker உட்பட கண்டுபிடிக்க உதவும் எந்தக்கருவியும் இல்லை, பிரான்ஸ் வங்கியிலிருந்து வந்த பணம் தவிர வேறு எந்த யூரோ நோட்டுகளின் வரிசை எண்ணும் தெரியாது.

வேறு வகையில் சொல்லப்போனால், திருடன் எந்த பயமுமின்றி அந்தப்பணத்தைச் செலவு செய்யலாம்.

அந்த நபர் 40 வயது மதிக்கத்தக்கவன், கருப்பு நிறச் சட்டையும் வெள்ளை கோடுகள் உடைய நீல நிற கால் சட்டையும் அணிந்திருந்தான் என்பது தவிர பொலிசாருக்கு வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அவன் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன், பெல்ஜியம் அல்லது ஏதேனும் ஐரோப்பிய நாடுகள் வழியாக அவன் தன் சொந்த நாட்டிற்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்