அம்மா வயது பெண்ணை மணந்த பிரான்ஸ் ஜனாதிபதி! முதன்முறையாக மனம் திறந்த பிரிஜிட்டின் மகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1488Shares
1488Shares
ibctamil.com

தன் தாய் வயதுள்ள ஒருவரை மணந்ததால் நீண்ட காலமாக சர்ச்சைக்குள்ளான பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான தனது தாயின் உறவு குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் பிரான்சின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானின் இளைய மகளான Tiphaine Auziere.

வெகு சீக்கிரமாகவே அவர்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டார்கள் என்று கூறும் Tiphaine இரண்டு பேருக்கும் இடையிலான காதல் மிகவும் வலிமையானதும் அதே நேரத்தில் மிகவும் கடினமானதும் கூட என்று கூறும்போது அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.

இமானுவல் மேக்ரானை முதல் முறை சந்திக்கும்போது Tiphaineக்கு ஒன்பது வயது. அவரது சகோதரியான Laurenceம் இமானுவலும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

ஒரு நாள் அவள் தன் தாயிடம் வந்து ” அம்மா என் வகுப்பில் வால் பையன் ஒருவன் இருக்கிறான், எல்லா விடயங்களைக் குறித்தும் அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது” என்று கூறினாள், அவள் கூறியது இமானுவல் மேக்ரானைக் குறித்து.

தனக்கு 16 வயது இருக்கும்போது இமானுவல், தன்னைவிட மூத்த தனது ஆசிரியையுடனான தனது காதலைக் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

இமானுவலின் பெற்றோர் அந்த ஆசிரியையை அழைத்து இமானுவலுக்கு 18 வயது ஆகும் வரையாவது அவரை சந்திக்காமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

உங்களுக்கு எந்த சத்தியமும் என்னால் செய்து தர முடியாது என்று பதிலளித்தார் அந்த ஆசிரியை, பிரிஜிட்.

காதல் என்பதைக் குறித்த ஒரு காட்சியை உங்கள் கண் முன் காட்ட வேண்டுமானால், அது இமானுவலும் அம்மாவும்தான் என்கிறார் Tiphaine.

அவர்கள் இருவரும் சேர்ந்திருந்தால் உலகத்தையே மறந்து விடுவார்கள் என்று கூறும் Tiphaine, தனது பெற்றோர் விவாகரத்து செய்யும்போதுகூட தங்கள் பிள்ளைகள் பாதிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தியதை மறவாமல் நினைவு கூறுகிறார்.

அன்று அவர்களது காதல் குறித்து அவ்வளவு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் இன்று 67 சதவிகித பிரான்ஸ் மக்கள் தங்கள் முதல் பெண்மணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்