இவ்வளவு பெரிய தொகைக்கு இதையா வாங்குவது: வெளுத்து வாங்கும் மேக்ரானின் விமர்சகர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் முதல் பெண்மணி பீங்கான் கோப்பைகள் வாங்குவதற்கு 50,000 யூரோக்கள் மக்களின் வரிப்பணத்தை செலவழித்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

1950களில் வாங்கப்பட்ட பீங்கான் பொருட்கள் பழமையாய்ப் போனதால் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் பீங்கான் பொருட்களை வாங்க பிரான்ஸ் முதல் தம்பதி முடிவு செய்தனர்.

எனவே அவர்கள் 1848ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி மாளிகைக்கு பீங்கான் பொருட்களை சப்ளை செய்யும் Manufacture nationale de Sèvres என்னும் நிறுவனத்தில் 900 உணவு தட்டுகள் மற்றும் 300 சிறு தட்டுகள் அடங்கிய ஒரு செட் பீங்கான் பொருட்களை ஆர்டர் செய்தனர்.

ஆனால் தற்போது அவற்றின் விலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பத்திரிகை அவற்றின் மதிப்பு 50,000 யூரோக்கள் என்றும் இன்னொரு பத்திரிகை 500,000 யூரோக்கள் என்றும் மதிப்பிட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக மேக்ரான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், வேலை நிறுத்தங்கள் வரை சென்றுள்ள நிலையில் இத்தகைய செலவினம் மேக்ரானின் விமர்சகர்கள் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.+

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers