ஈரானில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்.. காரணம் கேட்கும் மேக்ரான்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஒருவரை ஈரானிய பொலிசார் கைது செய்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் அதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.

பாரிசில் உள்ள Sciences Po என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் Fariba Adelkhah. இவரை ஈரானில் வைத்து அந்நாட்டு பொலிசார் கைது செய்திருந்தனர். ஆனால், கைது குறித்து தகவல்கள் எதுவும் அப்போது அறிவிக்கப்படாத நிலையில், கடந்த 3 வாரங்களாகவும் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கைக்கான போதிய காரணம் வழங்கப்படவில்லை என பிரான்ஸ் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதில் கூறுகையில்,

‘ஈரானிய அரசுடன் தொடர்பு கொண்டு உடனடியாக தாமதம் இல்லாமல், ஆராய்ச்சியாளரை தொடர்புகொள்ளக் கூடிய வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் Belgradeயில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் கலந்துகொண்டார். அப்போது இந்த விடயம் தொடர்பாக அவர் கூறுகையில்,

‘பிரெஞ்சு ஆராய்ச்சியாளரின் கைது தொடர்பாக ஈரானிய அரசு போதிய விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் தெரிவித்த காரணம் திருப்தி தரவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்