மாட்டிறைச்சி பர்கரில் நோய்க்கிருமிகள்: தயாரிப்புகளை உண்ணவேண்டாம் என கோரும் பிரெஞ்சு நிறுவனம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இந்த வாரம் உலகெங்கிலுமுள்ள உணவுப்பிரியர்களுக்கு மோசமான செய்திதான். பல நாடுகளில் உணவுப்பொருட்களில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை உண்ணவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் சாஸேஜில் பிரச்ச்சினை, சுவிஸ் பாலாடைக்கட்டியில் பிரச்சினை, இப்போது பிரான்ஸ் பர்கரில் பிரச்சினை...

Super U என்னும் பல்பொருள் அங்காடிகள் தங்களிடமிருந்து வாங்கப்பட்ட மாட்டிறைச்சி பர்கர்களை திருப்பிக்கொடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

அந்த பர்கர்களில் ஈ.கோலை என்னும் கிருமி பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தின்பேரில், அவற்றை திருப்பிக் கொடுக்க அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பர்கர்கள் 3256224170150 என்ற barcode, lot number 234 மற்றும் health stamp FR 44 036 007 என்ற குறிப்பிட்ட batchஐ சேர்ந்த ஒரு கிலோ பெட்டிகளாகும்.

அந்த பர்கர்களின் காலாவதி திகதி 22/08/2020 ஆகும். அந்த பர்கர்களை உண்டவர்களுக்கு வயிற்று வலியோ, வயிற்றுப்போக்கோ அல்லது வாந்தியோ இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த கிருமிகளில் சில, வயிற்றுப்போக்கு முதல் சிறுநீரக தொற்று வரை ஏற்படுத்தக்கூடியவை, சில நேரங்களில் சிறுகுடலில் இரத்தப்போக்கும் ஏற்படலாம்.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அல்லது குறைந்த நோயெதிர்ப்பு சக்தியுடையவர்கள் இந்நோய்க்கிருமியால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்