பாரிஸின் நிலைமை குறித்து பிராந்திய பொலிசார் முக்கிய அறிவிப்பு: மர்ம நபர்களுக்கு எச்சரிக்கை

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மஞ்சல் மேலங்கி போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறை நாளையொட்டி போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் தற்போது பிராந்தியத்தின் நிலைமை குறித்து பொலிசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் முதலாம் ஆண்டு நிறை நாளையொட்டி ஆரப்பாட்டகாரர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதன்போது, பொலிசார் தலையிட்டு அவர்களை கலைத்தனர்.

Place d'Italie பகுதியில் போராட்டகாரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போராட்டகாரர்கள் கார், பைக் மற்றும் குப்பை தொட்டி என அனைத்திற்கும் தீ மூட்டினர்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது போராட்டகாரர்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். எச்எஸ்பிசி வங்கி கிளை மற்றும் 13 வது டவுன்ஹால் ஆகியவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன.

முகமூடி அணிந்த நபர்கள் சாட்லெட் லெஸ் ஹாலஸ் ஷாப்பிங் சென்டரைத் தாக்கியுள்ளனர். போராட்டகாரர்களின் வன்முறையால் பாரிஸ் நகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தற்போது நிலைமை முழுமையாக காட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பாரிஸ் நகர காவல்துறைத் தலைவர் டிடியர் லாலெமென்ட் தெரிவித்துள்ளார்.

Place d'Italie நடந்த வன்முறை படங்கள் மோசமாக இருந்தாலும், பாரிஸின் மற்ற பகுதிகள் அமைதியாக இருக்கின்றன என்பதே உண்மை. அதிர்ஷ்டவசமாக, பாரிஸின் பிற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.

Place d'Italie போராட்டகாரர்களை கட்டுப்படுத்த பொலிசார் முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறினார். இதன்போது, பிற்பகலில் 3 மணியளிவில் 61 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அங்கு எவரேனும் சிக்கலை ஏற்படுத்த முயன்றால் காவல்துறையினரால் மிகவும் கடினமாக கையாளப்படுவார்கள் என்றும் லாலெமென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்