பாரீஸில் ஏலம் விடப்பட்ட நெப்போலியனின் பூட்ஸ் பெருந்தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
St. Helena தீவில் சிறை வைக்கப்பட்ட பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் அணிந்திருந்த ஒரு ஜோடி பூட்ஸ் காலணிகள் பாரீஸில் நேற்று ஏலம் விடப்பட்டன.
நெப்போலியனை பின் தொடர்ந்து அத்தீவுக்கு சென்ற ஜெனரல் Henri Gatien Bertrand என்பவரால் அந்த காலணிகள் மீட்கப்பட்டன.
பின்னர் அந்த ஜெனரல் அவற்றை நெப்போலியனின் சிலை ஒன்றை செய்துவந்த சிற்பி ஒருவரிடம் ஒப்படைத்தார்.

நேற்று பாரீஸில் அவை ஏலம் விடப்பட்ட நிலையில், 50,000 யூரோக்கள் முதல் 80,000 யூரோக்கள் வரை அவை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்ததைவிட கிட்டத்தட்ட இரட்டிப்பாக 117,000 யூரோக்களுக்கு அவை ஏலம் போனது.
பிலிப்பைன்சின் முன்னாள் முதல் பெண்ணாகிய இமெல்டா மார்க்கோசைப்போலவே நெப்போலியனும் ஏராளமான காலணிகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
