பிரான்சை நெருங்கும் மருந்தே இல்லாத தக்காளி வைரஸ்: பெரும் அபாயம் என கணிப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மருந்தே இல்லாத வைரஸ் தொற்று ஒன்று பிரான்சை நெருங்கி வருவதால், தக்காளி, மிளகாய் போன்ற தாவர உற்பத்தி மற்றும் வியாபாரம் பெரும் அபாயத்திலிருப்பதாக பிரான்சின் உணவு மற்றும் சுகாதார ஏஜன்சி எச்சரித்துள்ளது.

தக்காளி பழுப்பு ரூகோஸ் பழ வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தாவர வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லையாம்.

இந்த வைரஸால் மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், தாவரங்களுக்கிடையே வெகு விரவில் அது பரவக்கூடியது என்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.

வைரஸ் பாதித்த தாவரங்கள் வேர் முதல் நுனி வரை பாதிக்கபடுமாம்.

அந்த வைரஸுக்கு தற்போதைக்கு மருந்து எதுவும் இல்லை என்று கூறியுள்ள உணவு மற்றும் சுகாதார ஏஜன்சி, நோய் வரும் முன் தடுப்பது மட்டுமே தாவரங்களை பாதுகாக்க ஒரே வழி என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் வைரஸ் விதைகள் வழி பரவுவதைத் தவிர்க்க, ஒன்லைனிலோ தெரியாத இடங்களிலிருந்தோ விதைகளை வாங்கவேண்டாம் என்றும் உணவு மற்றும் சுகாதார ஏஜன்சி எச்சரித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers