வேலை நிறுத்தத்தால் பாரீஸ் தெருக்களில் குவிந்துள்ள குப்பை: அதிகாரிகள் புது சட்டம் போட்டும் பயனில்லை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

குப்பைகளை எரிக்கும் நிலையங்களில் பணி செய்வோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து பாரீஸ் தெருக்களில் குப்பை குவியத் தொடங்கியுள்ளது.

குப்பைகளை எரிக்கும் நிலையங்களில் வேலை அளவு குறைந்ததால், குப்பை குவிய ஆரம்பிக்க, அதை ஈடுகட்டுவதற்காக உள்ளூர் அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள்.

அதன்படி, தெருக்களில் குப்பை குவிவதைத் தடுப்பதற்காக, குப்பைகளை எரிப்பதற்கு பதில் குப்பகளைப் புதைக்கும் நடைமுறையை அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால், இதிலும் சில பிரச்சனைகள் உள்ளன.

முதலாவது, 5,000 டன் குப்பைகள் புதைக்கப்படுவதற்கு நாளொன்றிற்கு 700,000 யூரோக்கள் செலவாகிறது.

அதிக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக எரிபொருளும் செலவாகிறது. அத்துடன், வழக்கமான நேரத்தை விட அதிக நேரமும் இதில் செலவாகிறது.

மொத்தத்தில், குப்பைளை அகற்றுவதற்காக புதுச் சட்டம் போட்டும், மூன்றில் இரண்டு பங்கு குப்பைகள்தான் அகற்றப்பட்டுள்ளன.

எனவே, குடியிருப்புப் பகுதிகளில் இன்னமும் குப்பைகள் குவிந்துதான் கிடக்கின்றன. பாரீஸ் துணை தூய்மை மேலாளரான Paul Simondon கூறும்போது, இந்த பிரச்சனை தேவையற்ற, மிகவும் கவலைக்குரிய ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.

ஓய்வூதியம் தொடர்பான வேலை நிறுத்தங்கள் பிரான்சில் தொடரும் நிலையில், குப்பை எரிக்கும் நிலையங்களும் அதில் பங்கு கொண்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers