400 ஆண்டுகள் ஆனாலும் மட்கிப்போகாத மாஸ்குகள்: அபராதம் விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மாஸ்குகள் மண்ணோடு மண்ணாக மட்கிப்போக 450 ஆண்டுகள் ஆகும் என்பதால், மாஸ்குகளை பயன்படுத்தி விட்டு வீசியெறிவோருக்கு கடும் அபராதம் விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது பிரான்சில் ஒருவர் மாஸ்க் அல்லது கையுறையை வீசி எறியும்போது பிடிபட்டால், அவருக்கு 68 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

இதை 300 யூரோக்களாக உயர்த்த, வலது சாரி நாடாளுமன்ற உறுப்பினரான Eric Pauget, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பிரச்சினை குறிப்பிடத்தக்க அளவில் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் அவர்.

அவர் முன்வைத்துள்ள மசோதா சட்டமாக்கப்படுவதற்கு முன் நாடாளுமன்றம் மற்றும் செனேட்டின் முன் வைக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்