பிரான்ஸ் நாட்டினர் பலர் படு காயம்! பெய்ரூட்டை உலுக்கிய பயங்கர வெடிவிபத்தில் வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தில் பிரான்ஸ் நாட்டினர் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான விசாரணையை அந்நாட்டு வழக்கறிஞர்கள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் வெடிவிபத்து காரணமாக, இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்த வெடிவிபத்தில் வெளிநாட்டினர் பலர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டினர் 21 பேர் இந்த வெடி விபத்து காரணமாக காயமடைந்திருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து, பிரான்ஸ் வழக்கறிஞர்கள் இந்த வெடி விபத்து தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் தங்கள் அதிகார வரம்பை பயன்படுத்தி, விசாரிக்க துவங்கியுள்ளதாக பாரிஸ் வழக்கறிஞரான ரெமி ஹெய்ண்ட்ஸ் கூறியுள்ளார்

மேலும், இந்த விபத்தில் பிரித்தானிய நாட்டினர் யாரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து காரணமாக ஐந்து பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் இருந்த பெய்ரூட் மீண்டு வர குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்