சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் பெங்களூருக்கு செல்லலாம்: புல்லட் ரயிலுக்கு ஜேர்மன் தயார்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

சென்னை-பெங்களூரு-மைசூர் நடுவே அதிக வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சதாப்தி ஆகும்.

சென்னையிலிருந்து மைசூருக்கு, சதாப்தி ரயிலில் ஏழு மணி நேரம் செலவாகும்.

சென்னை-பெங்களூரை 5 மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கிறது. ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, சென்னை-பெங்களூர் நடுவே, 6 மணிநேரம் முதல் 7 மணி நேரம் வரை செலவாகின்றன.

இந்த நிலையில்தான் இந்தியாவுக்கான ஜேர்மனி தூதர் மார்ட்டின் நே தங்களது ஆய்வறிக்கை, ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினி லோகானியிடம் வழங்கியுள்ளார்.

சென்னை மற்றும் மைசூர் நடுவேயான 435 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் காரிடார் அமைக்க முடியும்.

இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் புல்லட் ரயிலை ஒரு மணிநேரத்திற்கு அதிகபட்சமாக 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். 435 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கக்கூடிய இந்த மார்க்கத்தில் 84% தண்டவாளம் என்பது பாலத்திற்கு மேலேயும், 11% சுரங்கமாகவும், எஞ்சிய பகுதிகள் தரைப் பகுதியிலும் இயங்கக் கூடியதாக இருக்கும்

இந்த ரயில் திட்டம் அமலுக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 120 நிமிடங்களில் சென்றுவிட முடியும். அதாவது, இரண்டு மணி நேரம் மட்டுமே. இதன் மூலம் இவ்விரு நகரங்கள் நடுவே பயணிக்கும் பல லட்சம் பயணிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்

தற்போதைய நிலையில் மும்பை-அகமதாபாத் நடுவேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜப்பான் அரசு நிதி உதவியுடன், இந்த திட்டம் செயல்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers