ஜேர்மனியில் இந்திய தம்பதிக்கு கத்திக்குத்து... பரிதாபமாக உயிரிழந்த கணவன்... புலம்பெயர்ந்த நபரின் வெறிச்செயல்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் இந்திய தம்பதியை புலம் பெயர்ந்த நபர் கத்தியால் குத்திய சம்பவத்தில் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பதிவில் ஜேர்மனியின் Munich நகரின் அருகில் இந்தியரான பிரசாந்த் பஷாருர் மற்றும் அவர் மனைவி ஸ்மிதா ஆகியோரை புலம்பெயர்ந்த New Guinea தீவை சேர்ந்த 33 வயதான நபர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் பிரசாந்த் உயிரிழந்துவிட்டார், ஸ்மிதா தற்போதைக்கு நலமாக உள்ளார்.

பிரசாந்தின் சகோதரர் ஜேர்மனிக்கு செல்ல நாங்கள் வழிவகுத்து தருகிறோம், அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அங்குள்ள இந்திய தூதரகத்தின் செயல்பாடுக்கு வாழ்த்துக்கள், பிரசாந்த் - ஸ்மிதா தம்பதியின் இரண்டு குழந்தைகளை கவனித்து கொள்ள அவர்களிடம் கூறியிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதனிடையில் பிரசாந்தை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாகவும், அவர் பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers