தாய்ப்பாலில் விஷத்தை கலந்து கொடுத்து குழந்தைகளை கொல்ல முயன்ற நர்ஸ்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் தாய்ப்பாலில் விஷத்தை கலந்து கொடுத்து குழந்தைகளை கொல்ல முயன்றதாக நர்ஸ் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென ஐந்து குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் ஐந்தும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், நல்ல வேளையாக மருத்துவர்கள் அவைகளைக் கவனித்ததால், உடனடி நடவடிக்கையில் இறங்கி அவர்களைக் காப்பாற்றியுள்ளார்கள்.

அந்த ஐந்து குழந்தைகளுக்கும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டபோது, morphine என்ற பொருள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவரவே,பொலிசாருக்கு உடனடியாக தகவலளிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த பொலிசார் மருத்துவமனை ஊழியர்களின் லாக்கர்களை சோதனையிட்டபோது, அவற்றில் ஒன்றில் ஊசி போட பயன்படும் ஒரு சிரிஞ்சில், தாய்ப்பாலுடன் morphine கலந்து வைக்கப்பட்டிருந்தது பின்னர் தடயவியல் சோதனைகளிலிருந்து தெரியவந்தது. அந்த நர்ஸ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஐந்து கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers