விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை திருடிச்சென்ற திருடர்கள்: பொலிசாரிடமிருந்து நழுவிய இரட்டையரில் ஒருவன்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
180Shares

ஜேர்மன் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து திருடர்கள் விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை திருடிச்சென்ற வழக்கில் ஒருவன் பொலிசாரிடம் சிக்காமல் நழுவிவிட்டான்.

2019ஆம் ஆண்டு ஜேர்மனியின் Dresden நகரிலுள்ள அருங்காட்சியம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டது. அதில், வரலாற்றுப் பெருமை வாய்ந்த Dresden வெள்ளை வைரம் உட்பட பல பொருட்கள் கொள்ளைபோயின.

இந்த சம்பவத்தின் பின்னணியில் அரேபிய இனத்தவர்களாலான Remmo Clan என்னும் கொள்ளை கும்பல் இருப்பதாக ஜேர்மன் அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இந்த அரேபியர்கள் பலர் பெர்லினிலுள்ள Neukölln பகுதியில் வாழ்கிறார்கள். எனவே, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 1,600 ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் Neukölln பகுதியில் ரெய்டுகளில் இறங்கினார்கள். ரெய்டுகளில் சந்தேகத்துக்குரிய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால், கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடைய இரட்டையர்களான Abdul R. மற்றும் அவனது சகோதரன் ஆகிய இருவரும் பொலிசில் சிக்காமல் தப்பிவிட்டார்கள்.

சென்ற மாதம் Abdulஇன் சகோதரன் பொலிசில் சிக்க Abdul மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில், Neuköllnஇலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் Abdulஇருப்பதாக நேற்று பொலிசாருக்கு நம்பத் தகுந்த துப்பு கிடைத்ததையடுத்து, பொலிசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தார்கள்.

ஆனால், Abdul எப்படியோ அங்கிருந்து நழுவிவிட்டான். இதற்கிடையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம், அவை இனி கிடைக்கப்போவதில்லை என்ற அச்சமும் நிலவுவதை மறுக்க இயலவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்