பெண்களே ரெட் ஒயின் சாப்பிடுங்கள்!

Report Print Aravinth in ஆரோக்கியம்

ரெட் ஒயின் அருந்துவதால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை குணமடைகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று.

இந்நிலையில், ரெட் ஒயினை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வில், ரெட் ஒயின், திராட்சைப்பழம், சாக்லேட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு, ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னை ஏதுமின்றி இயல்பாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.

இதன்மூலமாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடிவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சில ரெட் ஒயினின் நன்மைகள்:
  • ரெட் ஒயின் உடலிலுள்ள பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை குறைப்பதால் மார்புப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
  • வயதான காலத்தில் கண்களில் Macular Degeneration பாதிப்பு ஏற்படுகிறது, ரெட் ஒயின் குடிப்பதால் இந்தப்பிரச்சனையில் இருந்து குணமாகலாம்.
  • heme oxygenase அளவை அதிகரிப்பதால், மூளையின் நரம்பு செல்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
  • வெள்ளை ஒயின் நுரையீரல் செயல்பாட்டிற்கு சிறந்தது மேலும் ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோய்க்கு சிறந்தது.
  • ரெட் ஒயின் enzyme SIRT1 யின் அளவை அதிகரிப்பதால், இந்த என்சைம் இன்சுலின் ஹார்மோன் அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அருந்தலாம்.

  • ஸ்பெயினில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாரத்திற்கு 2 முதல் 7 கிளாஸ் ஒயின் குடித்தல் மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ரெட் ஒயின் குடலில் ஏற்படும் கட்டிகளை 50 சதவீதம் குணப்படுத்துகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • Procyanidins என்ற ப்ளேவானாய்டு ரெட் ஒயினில் உள்ளதால் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • ரெட் ஒயினில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது.
  • ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments