உங்கள் கைகள் சுத்தமாக இருக்கிறதா? ஒரு சின்ன டெஸ்ட்

Report Print Meenakshi in ஆரோக்கியம்

நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு நமது கைகளை நன்கு கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பெரும்பாலான நோய் தொற்றுகள் நமது கையில் உள்ள கிருமிகள் மூலமாகவே ஏற்படுகிறது.

தற்போது கைகளை கழுவுவதற்கென சோப்புகள் மற்றும் லோஷன்கள் வந்துவிட்டது.

இதனை உபயோகித்து கழுவுவதால் கிருமிகள் நீக்கப்பட்டுவிடும் என நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அது தவறு என ஒரு ஆய்வில் நிறுபிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை

கைகளை கழுவும் முறையினை பொருத்து கைகளில் எவ்வளவு கிருமிகள் உள்ளன.

எவ்வளவு கிருமிகள் அழிந்துள்ளன என்பதை அறிவதற்கு கைகளை கழுவிய பின்னர் எக்ஸ்ப்எரிமெண்ட் க்ளோ ஜெல் என்னும் க்ரீமினை கைகளில் தடவி கொள்ள வேண்டும்.

பின்னர் யு.வி. கேமரா மூலம் கைகளில் உள்ள கிருமிகளின் அளவினை பதிவு செய்தனர் ஆய்வாளர்கள்.

இம்முறையில் நம் கைகளில் எவ்வளவு வெள்ளை நிறமானது காணப்படுகிறதோ அவ்வளவு கிருமிகள் நம் கையிலேயே தங்கி உள்ளது என அர்த்தம்.

ஒரு சிலர் கைகளை மூன்றே விநாடிகளில் கழுவி, உதறிவிட்டு வந்துவிடுவர். இப்படி கைகழுவும் நபரின் கைகளில் கிருமிகளானது அப்படியே தங்கி இருக்கும்.

சோப்பு இல்லாமல் 6 விநாடிகள் கைகளை கழுவும் போது கைகளில் உள்ள கிருமிகள் முழுவதும் அகற்றப்படுவது இல்லை.

குறைந்தபட்சம் 15 விநாடிகளாவது கைகளை நன்கு தேய்து கழுவ வேண்டும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

6 விநாடிகள் சோப்பினை பயன்படுத்தி கைகளை கழுவும் போது கைகளில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுவது இல்லை, நீக்கப்படுகின்றன.

அவை நாம் பயன்படுத்தும் சோப்பிலேயே ஒட்டி கொண்டு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

15 விநாடிகள் சோப்பினை பயன்படுத்தி கழுவும் போது கிருமிகள் நீக்கப்படுகின்றன. ஏறக்குறைய இதுவே கைகளை சுத்தமாக வைத்து கொள்வதற்கு ஏற்றது.

ஆனால் அமெரிக்காவின் நோய் மற்றும் பாதுகாப்பு மையமானது 15-30 விநாடிகளுக்கு கைகளை கட்டாயம் கழுவ வேண்டும் என கூறுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments