மாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க வேண்டுமா? இதோ இயற்கை வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள்.

அதிலும் சில பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்படும். இதன் போது ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்லமால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்ட கட்டுப்படுத்த முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

  • கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

  • கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

  • கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

  • கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

  • கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

  • கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

  • கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்