வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதியா? இந்த அற்புத ஜூஸை மட்டும் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெயிற்காலங்களில் சிறிது நேரம் சுற்றினாலே, உடலில் சூடு பிடித்துவிடும்.

இந்த சூட்டின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்படும்.

இதற்கு கால நிலை மட்டுமின்றி, உணவுகளான காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் கார உணவுகள் போன்றவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

ஒருவரது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் புதினா.

இது உடல் சூட்டை தணிக்க வல்லது. அதிலும் வெயிற்காலத்தில் இதில் ஜூஸ் போட்டு குடிப்பதனால் உடலுக்கு நல்ல பயனை அளிகின்றது.

தற்போது இந்த அற்புத ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • புதினா - 1 கைப்பிடி
  • இஞ்சி - சிறிய துண்டு
  • எலுமிச்சை பழம் - பாதி
  • கருப்பட்டி - சுவைக்கு
செய்முறை

புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

மிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, கருப்பட்டி, 2 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த ஜூஸை வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்