முட்டைக்குப் பதில் இந்த பொருட்களை சாப்பிடுங்க...உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தைப் பெறலாமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

முட்டை உலகில் அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஒரு ஊட்டச்சத்துள்ள பொருள் எனப்படுகின்றது.

ஆனால் சிலர் தனிப்பட்ட விருப்பங்கள், கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், அலர்ஜிகள் என பல காரணங்களால் முட்டை சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர்.

இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கமால் போகுகின்றது.

இதற்கு முட்டைக்கு நிகரான ஊட்டச்சத்தினை வழங்கக்ககூடிய பல சைவ உணவுகளும் உள்ளன.

அந்தவகையில் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் சைவ பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

  • முட்டைக்குப் பதிலாக டோஃபுவை சாப்பிடுங்கள். மிளகு மற்றும் ஆர்கனோவுடன் சேர்த்து இதனை வறுத்து சாப்பிடும்போது அது சுவையான காலை உணவாக இருப்பதுடன் உங்களின் புரத தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
  • முட்டைக்குப் பதிலாக 1/3 கப் பூசணிக்காயை எடுத்துக் கொள்ளலாம். இரண்டிலும் ஒரே அளவு ஊட்டச்சத்துக்கள்தான் உள்ளது.
  • வேகவைத்த உருளைக்கிழங்கை முட்டைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். 1/4 கப் உருளைக்கிழங்கு 1 முட்டைக்கு சமம்.
  • கேக் தயாரிக்கும்போது முட்டையின் வெள்ளைக் கருவிற்கு பதிலாக 1/4 கப் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.
  • 1 ஸ்பூன் ஆளி விதைகள் 1 முட்டையின் வெள்ளைக்கருவிற்கு சமமாகும். சுட்டு சாப்பிடும் எந்த உணவிலும் முட்டைக்குப் பதில் இதனை பயன்படுத்தலாம்.
  • 4 ஸ்பூன் சோள மாவுடன் 4 ஸ்பூன் தண்ணீரை கலப்பது இரண்டு முட்டைக்கு சமமாகும். , இது ஒரு சிறந்த பிணைப்பு குணம் கொண்ட பொருளாகும். அனைத்து உணவையும் இது பிணைக்கும்.
  • தண்ணீரில் ஊறவைத்த 1 ஸ்பூன் சியா விதைகளை சேர்ப்பது 1 முட்டையை சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் சமமான அளவு ஊட்டச்சத்தையும் கொடுக்கும்.
  • முட்டைக்குப் பதிலாக 1/4 கப் வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்