உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமா கரைக்கணுமா? இந்த மசாலா டீயை குடிங்க..

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனை குறைக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் உடல் எடையை குறைப்பதே சிறந்தது ஆகும்.

அதில் உடல் பருமனுக்கு காரணமான கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒரு சில இயற்கை பானங்கள் உள்ளன.

அதில் மசலா டீ உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகின்றது.

அந்த மசலா டீயை குடித்தால், மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, செரிமானம் சீராக நடைபெற்று, உடல் எடையும் குறையும்.

தற்போது அந்த அற்புத பானத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
  • பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை - பாதி
செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த டீயை தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

இதனால் செரிமானம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்