நீச்சலின்போது உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில அம்சங்கள்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

எமது உடல் பாகங்களை கடினமாக அசைத்து வேலை செய்யும்போது உடலிலுள்ள மேலதிக கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைவிற்கு உதவிபுரிகின்றன.

எனவே இவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு அதிகமாக நீச்சலையும் பின்பற்ற முடியும்.

எனினும் நீச்சல் செய்யும்போது சில அம்சங்களை கருத்தில்கொண்டால் உடல் எடையை சீராகவும், விரைவாகவும் குறைக்க முடியும்.

அவ்வாறான சில அம்சங்களை பார்க்கலாம்.

சரியான உணவுக்கட்டுப்பாடு

உடல் எடை குறைப்பிற்காக நீச்சலில் ஈடுபடும்போதும் சரி ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் சரி உணவுக்கட்டுப்பாடு அவசியமாகும்.

அதாவது நீச்சலிற்கு அதிகமாக சக்தி தேவை அத்துடன் நீச்சலிற்கு முன் குளிர்ந்த நீர் அருந்துவது பசியின்மையை ஏற்படுத்தும்.

ஆனால் இது நீச்சலின் பின்னர் அதிக பசி உணர்வை தூண்டும்.

எனவே நீச்சலின் பின்னர் அதிகமாக உணவு உட்கொண்டால் பயிற்சியினால் எந்த பயனும் இருக்காது.

பச்சை மரக்கறிகளை உண்பதுடன் புரோட்டீன் உள்ள பானங்களை நீச்சல் பயிற்சியின் பின்னர் அருந்துவது சிறந்தது.

முறையான ஸ்ரோக்கினை பின்பற்றல்

நீச்சலில் பல்வேறு ஸ்ரோக் காணப்படுகின்றது.

இவற்றில் உடல் எடை குறைப்பிற்கு பட்டர்ஃபிளை ஸ்ரோக் மிகவும் பயனுள்ளதாகும்.

இதன் மூலம் 10 நிமிடங்களில் 150 கலோரிகளை எரிக்க முடியும்.

இதற்கு அடுத்ததாக ஃபிரீ ஸ்டைல் நீச்சல் சிறந்ததாகும்.

இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 704 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

தீவிரமாக பயிற்சி செய்தல்

உடல் எடையை குறைப்பதற்காக நீச்சல் செய்யும்போது வழமையான நீச்சல் செய்யும் நேரத்தினை விடவும் அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டும்.

அத்துடன் நீச்சலின்போது வேகமாக, கடினமாக செயற்படுதலும் எரிக்கப்படும் கலோரிகளின் அளவை அதிகப்படுத்தும்.

சரியான நேரத்தினை தேர்ந்தெடுத்தல்

எப்போதும் காலை உணவிற்கு முன்னர் நீச்சலில் ஈடுபடுதல் மிகவும் பயன்தரக்கூடியது.

இந்த நேரத்தில் உணவு ஏதும் உட்கொள்ளாததால் ஏற்கணவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பானது வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படும்.

இதனால் உடல் எடை விரைவாக குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்