நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு சாதம்: செய்வது எப்படி?

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

மழை காலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி, சளியும், இருமலும் நம்மை பாடாய் படுத்திவிடும்.

நோய் எதிர்ப்புத் திறன் நம் உடலில் குறைந்தால், சளியும் உடலில் ஏற்படுவது இயற்கையே. கிருமி, நம் மூக்கை அடையும்போது தொற்றுநோய் ஏற்படுகிறது. அது, நம் தொண்டையை அடைய 10 - 15 நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ளும். இதனால் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஏற்படும்.

இப்போது உலக நாடுகளையே கொரானா அச்சுறுத்தி பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

கொரானாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

தேவையான பொருட்கள்

 • அரிசி - ஒரு கப்
 • கடுகு - அரை தேக்கரண்டி
 • உளுந்து - அரை தேக்கரண்டி
 • கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - 3
 • வெங்காயம் - ஒன்று
 • பூண்டு - 10 பல்
 • மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - சிறிதளவு
 • கொத்தமல்லித்தழை- சிறிதளவு
 • நெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் கொஞ்சம் நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

கூடவே, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து கிளவும். வடித்து வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.

இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்