கோடையில் புதினா நீர் உடலுக்கு தரும் மேஜிக் என்னென்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. பலரும் தங்களது உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

அதிலும் வேலைக்காரணமாக வெயிலில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் கோடையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகளவில் சந்திக்கிறார்கள்.

முக்கியமாக வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல் அனைத்தும் மிகவும் வேகமாக குறையும்.

எனவே உடலின் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் ஓர் அற்புத பானம் இருக்கிறது. அது உடலுக்கு பலவித மேஜிக் செய்து ஆரோக்கியத்தை தருகிறது.

புதினா தண்ணீர் எப்படி செய்வது

 • ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் சிறிது புதினா இலைகள், எலுமிச்சை துண்டுகள், வெள்ளரிக்காய், சிறிது தட்டிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, வேண்டிய நேரத்தில் பருகலாம்.
 • சளி மற்றும் தொண்டை பிரச்சினை உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்காமல் பருகலாம்.
 • மேலே சொல்லப்பட்ட பொருட்கள் சேர்க்காமல் வெறும் புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் தினமும் புதினா நீரை குடித்தால் வரும் நன்மைகள்

 • கோடையில் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதனை புதினா தண்ணீர் சரிசெய்யும்.
 • புதினாவில் நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்றவை அதிகமாக உள்ளது. இவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
 • கோடையில் புதினா நீரைக் குடிப்பதால், அதில் உள்ள அடர்ந்த நறுமணத்தால் குமட்டல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் காலை சந்திக்கும் சோர்வை இந்த புதினா நீர் தடுக்க உதவும்.
 • வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். ஆனால் இதனை புதினா நீர் குடிப்பதன் மூலம் இதை சரிசெய்யலாம். தொடர்ந்து இந்த நீரைக் குடித்தால் சருமம் பொலிவுடன் இருக்கும்.
 • புதினா சளியை முறிக்கக்கூடிய ஓர் அற்புத மூலிகை. இந்த நறுமணமிக்க மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நீரைப் பருகும் போது, சுவாசப் பாதைகள் சுத்தமாகி, சுவாசிப்பதில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
 • இந்த பானம் தொடர்ந்து குடித்தால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பலன் தரும்.
 • கோடை என்றாலே எரிச்சல் வரும். அதிலும் இக்காலத்தில் மாதவிடாய் பிரச்சனைகளான அடிவயிற்று வலி, பிடிப்புகள் போன்றவற்றை பெண்கள் சந்திக்கக்கூடும். இந்த பிரச்சினையை புதினா நீர் முறியடிக்கும்.
 • வீட்டில் தயாரித்த புதினா நீரைக் குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பாதுகாப்பு படலமாக புதினா நீர் இருக்கும்.
 • புதினா நீரைக் குடித்தால் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
 • கோடையில் உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புவோர் புதினா நீரை பருகலாம். இதனால் விரைவில் நல்ல பலனைப் கிடைக்கும். உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, கொழுப்புக்கள் ஆற்றலாக மாற்றப்படும். இதன் காரணமாக உடல் எடையை வேகமாக குறைக்க புதினா நீர் உதவி செய்யும்.
 • புதினா நீர் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
 • புதினா ஹிஸ்டமைன் வெளியேற்றத்தைத் தடுத்து, அழற்சி மற்றும் காய்ச்சலைத் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்