ராம்குமாரை 18 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமாரை 18 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி  உத்தரவு!

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடல் நிலையை ஆய்வு செய்ய மருத்துவர் மயில்வாகனன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த குழுவில் ஒரு பொது மருத்துவர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபு ணர், மயக்கவியல் நிபுணர், நர்சு மற்றும் ஒரு உதவியாளர் உள்ளனர்.

ராம்குமார் வைக்கப்பட் டுள்ள சிகிச்சை வார்டு பிரி வில் வேறு யாரும் அனு மதிக்கப்படவில்லை. அந்த வார்டு பகுதியை சுற்றி பொலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை ராம்குமார் மேலும் தெளிவாக பேசி னான். இதையடுத்து இன்றே அவனிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டது.

எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டு தற்போது அல்லிக்குளம் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு கொலையாளி ராம் குமாரை அழைத்து சென்று ஆஜர்படுத்த உகந்த சூழ்நிலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே எழும்பூர் 14-வது குற்றவி யல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் , ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் வந்து வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட் டது. அதன்படி நீதிபதி கோபிநாத் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவ ஆவணங்கள், பொலிசாரின் வழக்குப்பதிவு ஆவணங்களை அவர் பார்வையிட்டார். பிறகு அவர் கொலையாளி ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்த பிறகு கொலையாளி ராம்குமாரை வருகிற 18 ஆம் திகதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி அவன் புழல் சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் ராம் குமார் கழுத்தில் போடப்பட்டுள்ள தையலை பிரிக்க வேண்டியதுள்ளது.

எனவே இன்னும் ஒரு வாரம் வரை அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர். அவன் முழுமையாக நன்றாக பேசத் தொடங்கிய பிறகு அவனை புழல் ஜெயிலுக்கு கொண்டு செல்ல திட்டமிடப் பட்டுள்ளது.

நீதிபதி ராம்குமாரிடம் தனியாக ரகசிய விசாரணை நடத்தி உள்ளார். சுமார் 15 நிமிடம் விசாரணை நடைபெற்று உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments