கிராம பெண்களை விஷ ஊசி போட்டு கொன்ற கொடூர மருத்துவர்: அதிர்ச்சி தகவல்

Report Print Basu in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவர் ஒருவர், காமம் மற்றும் உடலுறுப்பு திருட்டிற்காக ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை விஷ ஊசி போட்டு கொன்று, உடல்களை எரித்து சாம்பலாக்கி உள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

wai கிராமத்தில் வசித்து வரும் 41 வயதான சந்தோஷ் போல் என்ற மருத்துவரே இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது பொலிசார் அவருக்கு டாக்டர் டெத் (Doctor Death) என பெயர் சூட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், குறித்த கிராமத்தில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்த மங்கள் ஜிட்ஹே என்ற பெண் காணாமல் போன வழக்கு குறித்து விசாரணையின் போது மருத்துவர் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பெண் மருத்துவரின் பல்வேறு குற்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்திவிடுவேன் என எச்சரித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து பொலிசார், மருத்துவருடன் பணியாற்றும் செவிலியரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

செவிலியர் அளித்த வாக்கு மூலத்தில், குறித்த பெண் உண்மையை வெளிபடுத்திவிடுவர் என பயந்து, மருத்துவரும், நானும் சேர்ந்த அவரை கடத்தி மருத்துவரின் பண்ணை வீட்டில் விஷ ஊசி போட்டு கொன்று உடலை எரித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர் சந்தோஷ் போலை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில்,இதுவரை ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை தான் விஷ ஊசி போட்டு கொன்று, தனது பண்ணை வீட்டில் வைத்து எரித்து எலும்புகளை புதைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் பொலிசார் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பொலிசார், மருத்துவரின் பண்ணை வீட்டில் நடத்திய சோதனையில் இதுவரை நான்கு பேரின் எலும்புகள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடலுறுப்பு திருட்டிற்காக 6 பேரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments