இராணுவ மைதானத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

Report Print Basu in இந்தியா

சென்னையில் உள்ள இராணுவ மைதானத்தில் குவியல் குவியலாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் உள்ள இராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்திலே ரூபாய் நோட்டுகள் கொட்டப்பட்டுள்ளது. மைதானம் வழியாக சென்றவர்கள் ரூபாய் நோட்டுகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இச்செய்தி ஆவடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீயாக பரவ பொதுமக்கள் பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.

இது குறித்து பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு கிடந்ததால், இராணுவ உயரதிகாரிகள்தான் அங்கு பணத்தை கொட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments