சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான வழக்கு: ரத்து செய்தது நீதிமன்றம்

Report Print Raju Raju in இந்தியா
109Shares
109Shares
lankasrimarket.com

சூர்யா, சத்யராஜ், விவேக் உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2009ம் ஆண்டு விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி செய்திகள் வெளியானது. இதற்கு நடிகர் சங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இது தொடர்பாக 8 பேர் மீதும் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்த இவ்வழக்கில் 8 பேரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டும் அவர்கள் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இதை எதிர்த்து நடிகர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments