உலக நன்மைக்காக நள்ளிரவில் அகோரிகளின் அரைநிர்வாண பூஜை

Report Print Fathima Fathima in இந்தியா

திருச்சியில் மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகள் 20 பேர் முகாமிட்டு காளி கோவிலில் பூஜை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசியின் கங்கை நதிக்கரையில் ஹரித்துவார், ரிஷிகேஷியிலும் நிர்வாண அகோரிகள் முகாமிட்டு இருப்பார்கள்.

இவர்கள் காசி கங்கை நதிக்கரையில் எரிக்கப்படும் சடலங்களை சாப்பிட்டு, உடல் முழுவதும் சாம்பலை பூசியபடி மண்டையோட்டுடன் வலம் வருவார்கள்.

இந்நிலையில் இந்துத்துவா அமைப்பினர் காசி அகோரிகள் 20 பேரை அழைத்து வந்து திருச்சி அரியமங்கலத்தில் உள்ள காளி கோவிலில் பூஜை நடத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள அகோரிகள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றுள்ளனர். நள்ளிரவு தொடங்கிய பூஜையில் காலபைரவர் சிலைக்கும் பிரிதிஷ்டை செய்யப்பட்டதுடன் உடுக்கை மற்றும் சங்குகள் முழங்க யாகம் நடைபெற்றது.

இதன் மூலம் உலகத்திற்கு நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை, விடிய விடிய நடைபெற்ற யாகத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers