பார்ப்பவர்களின் மனதை உலுக்கிய ஒரே ஒரு புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காய்கறி விற்றுக்கொண்டிருக்கும் மூதாட்டியின் அருகில் இருக்கும் குரங்கிடம் தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த மூதாட்டி கூறும் புகைப்படம் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 2 நாட்களாக இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஆனால், இந்த புகைப்படம் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் தெரியவரவில்லை.

அந்த புகைப்படத்தில், வயதான மூதாட்டி ஒருவர் அமர்ந்து காய்கறிகள் விற்றுக்கொண்டிருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தனது வாழ்க்கையை நடத்துவதற்கு அவர் நடத்தும் போராட்டம் அவரின் உடல்மொழியில் நமக்கு உணர்த்துகிறது.

அப்போது, அவருக்கு அருகில் வந்து அமர்ந்த குரங்கு ஒன்று அந்த மூதாட்டியின் தோள் மீது கையை வைத்து, அமர்ந்திருக்க, அந்த மூதாட்டி அந்த குரங்கிடம் தன்னிடம் ஏதும் இல்லை என்று தனது இயலாமையை கூறுகிறார்.

இதனை அக்குரங்கு கேட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஒருவித வலியை உணர்த்துகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers