நடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்

Report Print Raju Raju in இந்தியா
772Shares
772Shares
ibctamil.com

நடிகர் ஜூகல் அகமது மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

அசாம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான அகமது இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் விழுந்து கிடந்தார்

அருகிலிருந்தவர்கள் அகமதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

சாலை விபத்தில் சிக்கி அகமது உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அகமதை திட்டமிட்டு சிலர் கொலை செய்ததாக அவரின் குடும்பத்தாரும், உறவினர்களும் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்