ராஜபக்ச பிரதமரான பின்னணி தமிழர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது: மு.க ஸ்டாலின்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென பொறுப்பேற்றார்.

இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், பிரதமர் பொறுப்பில் ரணில் விக்ரமசிங்கே நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச திடீர் பிரதமராக பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்