பிரபல தமிழ்ப்பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் ஶ்ரீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

பிரபல நடிகரான ஶ்ரீனிவாசன் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் சிறைச்சாலை, லேசா லேசா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 'குட்டிமாமா' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணி கொச்சி நகரின் எடப்பாலி நகரில் லால் மீடியா ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை டப்பிங் கொடுத்து கொண்டிருந்த ஶ்ரீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக எர்ணாகுளம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. ஐசியூவில் இருக்கும் ஶ்ரீனிவாசனை வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers