இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் போலிகளை பரப்பாதீர்கள்: நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்

Report Print Kabilan in இந்தியா

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த தியாகிகள் தொடர்பான போலியான புகைப்படங்களை பரப்ப வேண்டாம் என, நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 45 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஆனால், வீர மரணமடைந்த தியாகிகளின் உடல் பாகங்கள் தொடர்பாக சிலர் போலியான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதில் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வீர மரணமடைந்த எங்கள் தியாகிகளின் உடல் பாகங்கள் தொடர்பாக சில போலியான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.

நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், வெறுப்புணர்வை தூண்டுவதற்கு இந்தப் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. தயவு செய்து அந்த போலிகளை பகிரவோ, பரப்பவோ அல்லது லைக் போடவோ செய்யாதீர்கள்’ என தெரிவித்துள்ளது.

மேலும், போலியானவற்றை பரப்புபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், சி.ஆர்.பி.எஃப் இணையத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்