இறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் 3 லட்சம் ரூபாய் பணம் இருந்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் மதனபள்ளியைச் சேர்ந்தவர் பஷீர் சாப். 75 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல்லில் இருக்கும் தர்காவிற்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் உடல்நிலை சரியில்லாத நிலையில் பிச்சை எடுத்து வந்த அவர் இன்று உயிரிழந்தார்.

இந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் சடலத்தை மீட்டு அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் அவரது பையை சோதனை செய்த போது, அதில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிச்சைக்காரருக்கு எது இவ்வளவு பணம், சேர்த்து வைத்திருந்தாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்