விடைபெற்றார் சுஷ்மா... கண்கலங்கிய மோடி: அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்ட புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்,பாஜக கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் நேற்றிரவு இரவு காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கிய தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது மோடி கண்கலங்கினார், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

2014-2019 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய சுஷ்மா சுவராஜ், 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து உடல் நலக் குறைவால் விலகினார்.

மேலும் புதிய அமைச்சரவையிலும் பங்கு பெறவில்லை. அவர் தான் இந்திய நாட்டின் முதல் முழுநேர பெண் வெளியுறவு மந்திரி என்ற பெயரைபெற்றார்.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வழியெங்கும் இருந்த மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் கண்ணீருடன் அஞ்சலி. தேசிய கொடியை போர்த்தியை காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

அதன் பின் குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சிறந்த இந்திய பிரதிநிதியாக செயல்பட்டவர் சுஷ்மா சுவராஜ். இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த முக்கிய பங்காற்றியவர் . அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சுஷ்மா சுவராஜின் உடலைப் பார்த்து பிரதமர் மோடி கண்கலங்கிய நிலையில், அவரின் உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக, அவர் நேற்றிரவு அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் ஜான்பாத் பகுதியிலுள்ள தவான் டீப் பில்டிங்கிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 8 மணி முதல் 11 மணிவரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அங்கே சென்று சுஷ்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா இறந்த துக்கத்தால், மோடியின் கண்களில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிந்தது.

இதன்பிறகு, பாஜக தலைமை அலுவலகத்திற்கு சுஷ்மா உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மதியம் 3 மணிவரை தொண்டர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, வாகனத்தின் மூலம், அங்கேயிருந்து சுமார் 7 கி.மீற்றர் தொலைவிலுள்ள, லோதி ரோடு மின் மயானத்திற்கு சுஷ்மா உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது திரளான மக்கள் திரண்டு, சுஷ்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஒரு ட்வீட் போட்டால் போதும், தங்கள் குறைகளை தீர்த்து வைக்கும் சூப்பர் பெண் என்று கருதி வந்த சுஷ்மாவை இழந்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் ஒரு டுவிட் போட்டுவிட்டால், போதும் உடனே அதற்கான தீர்வை அப்போதும் சொல்லுபவர் சுஷ்மசுவராஜ்.

லோதி ரோடு மின் மயானத்திற்கு சுஷ்மா உடல், எடுத்துச் சென்ற பிறகு, மத அடிப்படையிலான சில இறுதிச் சடங்குகள் செய்யப்படும். இதற்கு பிறகு, சுஷ்மா உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்