என்னை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ...சின்மயானந்தா பற்றி மாணவி அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பாஜக தலைவரும் மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சின்மயானந்தா தன்னை ஒரு வருடமாக உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்தார் என்று வீடியோ வெளியிட்ட கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மத்திய முன்னாள் இணை அமைச் சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து, வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அந்த வீடியோ வெளியான பின் குறித்த மாணவின் மாயமானதால், அது குறித்து காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து மாணவி ராஜஸ்தானில் மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து

சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி மற்றும் சகோதரரை வேறொரு கல்லூரிக்கு மாற்ற உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிககள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு, பார் கவுன்சிலுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது. தங்களைப் பொறுத்தவரை அவர்களின் எதிர்காலம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த மாணவி, சின்மயானந்தா தன்னை ஒரு வருடமாக, பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த மாணவி, பாலியல் வன்கொடுமை பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழு 11 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தியது.

சின்மயானந்தா என்னை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட அனைத்து தகவல்களையும் சொல்லி விட்டேன். அவர் உடல்ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். அதற்கான ஆதாரம் இருக்கிறது. வீடியோ கிளிப் இருக்கிறது. நேரம் வரும்போது அதை வழங்குவேன்.

நான் தங்கிய கல்லூரி விடுதி அறை சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அது மீடியா முன்பு திறக்கப்பட வேண்டும். சின்மயானந்தா, பல சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். எத்தனை பேரை சீரழித்தார் என்பதை என்னால் சொல்ல இயலாது. நான் மட்டுமே துணிச்சலாக இப்போது புகார் கொடுத்துள்ளேன்.

நான் ஐந்து கோடி ரூபாய் கேட்டதாக, அவரது வழக்கறிஞர் கூறி யுள்ளார். அது பொய்யான புகார். அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்